ஆவடி: பூந்தமல்லியில் தாய் கண் முன்னே மகளை கடித்து குதறும் தெரு நாய்கள் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி
பூவிருந்தவல்லி நகராட்சி 13வது வார்டு மகாலட்சுமி நகர் சேர்ந்தவர் யாஸ்மின் மற்றும் அவரது ஒன்பது வயது மகள் சமீரா ஆகியோர் மகாலட்சுமி நகர் 5வது தெருவில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த இரண்டு தெரு நாய்கள் தாயையும், மகளையும் துரத்தி கடித்துள்ளது. இதில் சிறுமி சமிராவிற்கு 10க்கும் மேற்பட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.இதேபோல் சாலையில் சைக்கிளில் செல்லும் சிறுவர்களையும் அங்குள்ள தெரு நாய்கள் துரத்தி கடிக்கும் சிசிடிவி வெளியாகி உள்ளது