வேடசந்தூர்: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை எம்எல்ஏ காந்திராஜன் தொடங்கி வைத்தார்
வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழனி சுகாதார மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு வேடசந்தூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன் மகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் மருத்துவ பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.