திருவள்ளூர்: பண்ணூரில் பெண் துாக்கிட்டு தற்கொலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
திருவள்ளூர் அடுத்த மப்பேடு அருகே உள்ள பண்ணுார் பகுதியைச் சேர்ந்தவர் பெலிக்ஸ். இவரது மனைவி ஜோதி சாந்தி (51). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாத்திமா என்பவரின் வீட்டிற்கு பலர் வந்து சென்றதாக கூறப்படுகிறது.இதுகுறித்து இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் மற்றொரு நபர் பிரான்சிஸ்கோ என்பவர் சம்பந்தப்பட்ட பாத்திமா தரப்பிடம் கேட்டுள்ளார். இதற்கு ஜோதி சாந்தி தான் காரணம் என கருதிய பாத்திமா உறவினர்கள் ஜோதியை சண்டை போட்டுள்ளனர், இதனால் ஜோதி மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்