சித்தையங்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட சேடபட்டி மற்றும் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த த.வெ.க. பாஜக, அதிமுக கட்சி தொண்டர்கள் 50 பேர் த.வெ.க. கட்சியைச் சேர்ந்த முன்னாள் இளைஞரணி செயலளார் விவேக் தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு சால்வை அணிவித்து, தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு கட்சி சின்னம் பொறித்த ஆடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பேசினார்