சாத்தான்குளம்: சொக்கன்குடியிருப்பு மணல் மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
சொக்கன்குடியிருப்பு மணல் மாதா ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கொடியானது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆலயத்தின் முன்பு உள்ள கொடி மரத்தில் இயற்றப்பட்டது பின்னர் சிறப்பு திருப்பலி, ஆராதனை ஆகியவை நடந்தது. இதில் சொக்கன் குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான இறை மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.