தென்காசி: ஆபத்தான முறையில் அரசு பேருந்தில் படிக்கட்டுகள் தொங்கி பயணிக்கும் மாணவர்கள்
தென்காசி மாவட்டம் தென்காசியில் இருந்து செங்கோட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ளது இளஞ்சி இந்த கிராமத்தில் செயல்பட்டு வரும் ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் செங்கோட்டை தென்காசி சுற்றுவட்டாரங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இந்த நிலையில் மாலையில் பள்ளி விட்டவுடன் வீடு திரும்பும் மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லாததின் காரணமாக மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கி செல்வதால் அச்சம் ஏற்பட்டுள்ளது