சிங்கம்புனரி: மு.கோவிலாபட்டியில் முதியோர் உதவித்தொகை வரவில்லை என அமைச்சரிடம் கோரிக்கை-துறை சார்ந்த அதிகாரியிடம் தொலைபேசியில் அழைத்து நடவடிக்கை
சிவகங்கை மாவட்டம் மு.கோவிலாபட்டியில் மூதாட்டி ஒருவர் முதியோர் உதவித்தொகை வரவில்லை என அமைச்சர் பெரியகருப்பனிடம் கோரிக்கை வைத்தார். அமைச்சர் உடனடியாக அதிகாரியை தொலைபேசியில் அழைத்து உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்தார். மேலும், கையில் இருந்த தொகையை மூதாட்டிக்கு வழங்கி ஆறுதல் கூறினார்.