திண்டுக்கல் கிழக்கு: சாணார்பட்டி அருகே நீர் நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு பனை விதைகளை நட்டு வைத்த கிராம மக்கள்
சாணார்பட்டி ஒன்றியம் கம்பிளியம்பட்டி ஊராட்சி சீலி முத்து நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்தை பனை மர வனமாக மாற்றும் இலக்கில் ஒரு லட்சம் பண விதைகள் நடுவதென முடிவெடுத்து முதற்கட்டமாக ஆயிரம் பனை விதைகளை, நீர்வரத்து பகுதிகளான அம்பளக்காரன் குளக்கரையில் நடவு செய்தனர்.கிராமத்தை சுற்றிலும் உள்ள நீர் நிலை பகுதிகளான குளக்கரைகளில் பனை விதைகளை நட்டு கிராமத்தையே பனை வனமாக மாற்றுவோம் என தெரிவித்தனர்