திருச்செந்தூர்: புன்னக்காயல் ஊருக்குள் தாமிரபரணி ஆற்று வெள்ள நீர் செல்லாத வண்ணம் ஊர் மக்கள் மற்றும் அதிகாரிகள் ஆற்று நீரை வேறு பாதையில் கடலுக்குள் செலுத்தினர்
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்யும் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலில் கலக்கும் கிராமமான புன்னக்காயல் ஊருக்குள் தண்ணீர் சென்று பெருத்த சேதத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் ஊர் மக்கள், மாவட்ட நிர்வாகத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தெரிவித்ததை தொடர்ந்து அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊர் மக்கள் இணைந்து ஜேசிபி இயந்திரம் மூலம் தாமிரபரணி ஆற்றுநீரை வேறு பாதை மூலம் கடலுக்குள் அனுப்பி வைத்தனர். இதனால் வெள்ள எச்சரிக்கை சற்று குறைந்தது.