தாடிக்கொம்பு, சேர்ந்த வேல் தனது நண்பருடன் சரளப்பட்டி பிரிவு அருகே நடந்து சென்ற போது அங்கு வந்த செட்டிநாயக்கன்பட்டி, பாலக்குட்டையை சேர்ந்த சத்யப்பிரியன் தான் பெரிய ரவுடி என்றும் தன் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் கூறி உடைந்த பீர் பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பணம் பறிக்க முயன்றார். இதுகுறித்து வேல் அளித்த புகாரின் பேரில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சத்தியபிரியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்