புகளூர்: க.பரமத்தி அஞ்சூர் ஊராட்சி குப்பகவுண்டன்வலசு மற்றும் வளையபாளையம் பகுதிகளில் எம்எல்ஏ இளங்கோ வீடு வீடாக காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு
Pugalur, Karur | Apr 6, 2024 க.பரமத்தி அருகே உள்ள அஞ்சூர் ஊராட்சி குப்பகவுண்டன்வலசு மற்றும் வளையபாளையம் பகுதிகளில் ஏப்ரல் 6 ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் இந்தியா கூட்டணி சார்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவு திரட்டும் வகையில், வீடு வீடாக, அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ வாக்கு சேகரித்தார்.இந்நிகழ்ச்சியில் க.பரமத்தி மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் அஞ்சூர் ஊராட்சி திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.