திண்டுக்கல் கூட்டுறவு நகரில் உள்ள செல்வ விநாயகர் திருக்கோயிலில், ஸ்ரீ பாலமுருகன் சுவாமிக்கு, காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து உற்சவர்களான சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு இந்திரன் வீடு சார்பாக பக்தர்கள் வளையல், புடவை, பழங்கள், இனிப்பு கார வகைகள் என பல வகையான சீர் தட்டுகளை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர்.