வாலாஜா: அண்ணா அவென்யூவில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
ராணிப்பேட்டை மாவட்டம் ,ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் .தொடர்ந்து காரை, ஆற்காடு, வாலாஜாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது