கொடைக்கானல்: சுற்றுலா அலுவலகத்தை பூட்டு போட முயற்சி செய்த பொதுமக்களால் சுற்றுலா அலுவலகத்தில் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாரதி அண்ணா நகர் பகுதியில் ஒராவி அருவி மற்றும் ஐந்து வீடு அருவி அமைந்துள்ளது. இந்த இரண்டு அருவியையும் கடந்த 2018 ஆம் ஆண்டு சுற்றுலாத்தலமாக சுற்றுலா துறையினர் அறிவித்த நிலையில் தற்போது வரை எந்த ஒரு பாதுகாப்பு பணிகளையும் மேற்கொள்ளவில்லை. இன்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சுற்றுலா அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.