தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு தெற்கு தெரு பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களின் நிதியில் இருந்து சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன பாண்டியன் தலைமை வகித்தார் கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டை வைத்து பணிகளை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.