ஸ்ரீபெரும்புதூர்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சூரசம்ஹார விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக சூரசம்ஹாரம் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, முருகப் பெருமானுக்கு கடந்த ஆறு நாட்களாக சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடத்