நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மீனவர்கள் கோடிக்கரைக்கு வந்து தங்கி மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெருமாள்பேட்டையைச் சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரது கணவர் பொண்ணுகுட்டி, அவரது மகன் ரீகன், அதே ஊரைச் சேர்ந்த குமார், அன்புராஜ் மற்றும் கௌசிக் ஆகிய ஐந்து பேரும் கடலுக்கு மீன்பிடிக்க நேற்று மதியம் கோடிக்கரையில் இருந்து சென்றனர்