காஞ்சிபுரம்: இந்திரா நகர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ நாகவல்லி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 50 வது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ நாகவல்லி அம்மன் திருக்கோயில் 50 வருடங்களுக்கு மேலாக இருந்து வந்தது இந்நிலையில் கோவிலை புதிதாக புணரமைக்க முடிவு செய்தனர். அந்த வகையில் கடந்த ஒரு வருட காலமாக கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்ற கடந்த சில தினங்களுக்கு முன்பு பணிகள் முடிவுற்றது. இந்நிலையில் கும்பாபிஷேக விழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதனை ஒட்டி கோவில் வளாகத்தில் யாகசாலைகளை அமைக்கப்பட்டு உள்ளது