சிங்கம்புனரி: வேளார்தெரு வீட்டின் கழிவறை ஜன்னலில் கடுமையான விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை கண்டு அலறியடித்து ஓட்டம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கடந்த 15 நாட்களாக மழை பெய்கிறது. வனப்பகுதிகளில் இருந்து பாம்புகள் குடியிருப்புகளுக்குள் புகுகின்றன. வேளாளர் தெருவில் கணேசன் வீட்டு கழிவறை ஜன்னலில் விஷமிக்க கண்ணாடி விரியன் பாம்பைக் கண்டு பெண் அலறினார். தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். புதர்களை அகற்றி, வீட்டை சுத்தமாக வைக்கவும், கதவு-ஜன்னல்களை மூடவும், பாம்பு கண்டால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தரவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.