பல்லடம்: குமரானந்தபுரம் பகுதியில் பனியன் துணிகளை வாங்கி மோசடியில் ஈடுபட்ட சேலத்தை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்
திருப்பூர் குமரானந்தபுரம் ராஜா தெருவை சேர்ந்த பரத்குமார் என்பவரிடம் சேலத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் பனியன் துணிகளை வாங்கி பணம் தராமல் மோசடியில் ஈடுபட்டிருந்தார். இது தொடர்பாக பரத்குமார் மாநகர குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்திருந்த நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சேலத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரை இன்று கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.