வேடசந்தூர்: சினேகா மஹால் அருகே மாணவர்களுக்குள் தகராறு ஒரு மாணவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் பள்ளியின் சார்பில் மாவட்ட அளவில் நடைபெறும் புட்பால் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி பள்ளியில் நல்ல பெயர் பெற்றனர். இதில் இரண்டு மாணவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பள்ளி முடிந்து வரும் பொழுது ஒரு மாணவரை மற்றொரு மாணவர் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வேடசந்தூர் சாலை தெருவை சேர்ந்த மாணவர் ஆபத்தான நிலையில் பொதுமக்கள் மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.