டெலிபோன் காலனியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது புல்லட்டை கடந்த 26ம் தேதி மர்ம நபர் திருடி சென்றது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து அவரிடம் இருந்து புல்லட்டை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்