கலவை: செய்யாத்துவனம் பகுதியில் சாலை ஓரம் இருந்த ஏரிக்கால்வாயின் பக்கவாட்டில் அரசு பேருந்து இறங்கி விபத்துக்குள்ளானது
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த செய்யாத்துவனம் பகுதியில் ஆற்காடு நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து சாலை ஓரமாக இருந்த ஏரிக்கால்வாயின் பக்கவாட்டில் இறங்கி விபத்துக்குள்ளானது இதனை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் விபத்துக்குள்ளான அரசு பேருந்தில் இருந்த பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டனர். விரைந்து வந்த போலீசார் கிரேன் உதவியுடன் பேருந்தை மீட்டு சாலையில் மீண்டும் நிலை நிறுத்தினர்