ஸ்ரீபெரும்புதூரில் தனியார் தொழிற்சாலையில் காம்பஸ் கேட்டரிங் சர்வீஸ் பணிபுரியும் பெண்கள் பணி முடிந்து திருவள்ளூர் மாவட்டம் தக்கோலம் பகுதிக்கு வேனில் வந்து கொண்டிருந்த போது கொண்டஞ்சேரி பகுதியில் தனியார் வேன் மீது பேருந்து நேருக்கு நேர் மோதியதில் 17 பெண்கள் காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் பெண்களை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.