சூளகிரி: ரவுண்டானாவில் விசிக சார்பில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம், உட்கட்சி கோஷ்டி மோதல்: சாலை மறியலில் ஈடுபட்ட ஒருதரப்பினரை கைது செய்த போலிசார்
ஒசூர் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக சார்பில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம், உட்கட்சி கோஷ்டி மோதல்: சாலை மறியலில் ஈடுபட்ட ஒருதரப்பினரை கைது செய்த போலிசார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரியில் பட்டியலின சமூக மக்களுக்கு இலவச வீட்டுமனை, மயானத்திற்கு இடம் வழங்க வேண்டும்.. அரசு ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மைய மாவட்ட விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது..