ஒட்டன்சத்திரம்: கள்ளிமந்தயம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை கொள்ளை அடித்த வழக்கில் 2 பேர் கைது
ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம் பகுதியில் பட்டபகலில் திலீப் என்பவரின் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை கொள்ளை அடித்து சென்றது தொடர்பாக கள்ளிமந்தயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மோகன் (எ) சகாயராஜ், முத்துராஜ் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 5 பவுன் தங்க நகைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்