ஆற்காடு: தாமரைப்பாக்கத்தில் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளை கண்டித்து மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
Arcot, Ranipet | Sep 18, 2025 ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது .இந்த நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை பாதுகாப்பற்ற சூழலில் சேமித்து வைத்துள்ளதால் அவை முளைக்கும் தருவாயில் இருப்பதாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட போகின்றனர் .விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து விவசாயிகள் களைந்து சென்றனர்