திண்டுக்கல் கிழக்கு: தாமரைப்பாடி அருகே குடிபோதையால் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த 4 வாலிபர்கள் கைது
தாமரைப்பாடி, ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த தங்கவேல் மகன் முருகன் இவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில் திங்கட்கிழமை தாமரைப்பாடி அரசு மதுபான கடை பார் அருகே குடிபோதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக 4 பேர் முருகனை கல்லால் தாக்கினார். படுகாயம் அடைந்த முருகன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது தொடர்பாக வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமார், கிறிஸ்ட் ஆண்ட்ரூஸ், பாபா (எ) கரண் ஜேம்ஸ்ராஜ், காளிராஜ் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை