பெரம்பலூர்: பேரளியில் சட்ட விரோதமாக குட்கா விற்ற 2 பேர் கைது,
32 கிலோ குட்கா பறிமுதல்
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுகிறதா என பெரம்பலூர் மாவட்ட போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர். அப்பொழுது பேரளியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்ற செல்வம் மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 32 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்,