அரியலூர்: அம்பலவர்கட்டளை கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில், உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ₹1.56 லட்சம் பறிமுதல்
அரியலூர் மாவட்டம் அம்பலவர்கட்டளை கிராமத்தில் கோவிந்தராஜ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கீழஎசனை கிராமத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவரை சோதனை செய்தனர். அப்போது அவர் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ₹1,56,600-ஐ பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அப்பணம் அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணனிடம் ஒப்படைக்கபட்டது.