திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 400 க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் துப்புரவு படுத்தவும் நோயாளிகளுக்கு உதவி செய்யவும் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். உள்நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் பயன்பெறும் விதமாக வழங்கப்பட்டுள்ள வீல் சேர்களை நோயாளிகளுக்கு பயன்படுத்தாமல் அவர்களுக்கு உடைந்து போன வீல் சேர்களை வழங்கி அவர்கள் மேலும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் புதிய வீல் சேர்களை குப்பைகளை அள்ளிச்செல்ல பயன்படுத்தி வருகின்றனர்.