விருதுநகர்: தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தலைமை காவலர் மீது டூவீலர் மோதியதில் தலைமை காவலர் டூவீலர் ஓட்டி வந்தவர் படுகாயம்
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை இனணப்புச் சாலையில் தலைமை காவலர் செந்தில்குமார் நடந்து சென்று இருந்த போது பின்னால் வந்த டூவீலர் அவர் மீது பலமாக மோதியது இதில் செந்தில்குமார் மற்றும் டூவீலரை ஓட்டி வந்தவர் படுகாயம் அடைந்தனர் . உடனே அந்த வழியாக வந்த போலீசார் இருவரையும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் விபத்து குறித்து பஜார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.