வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மக்கள் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர் விவேகானந்தா வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ராணிப்பேட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன்,பிரபாகரன், சண்முகம், சுரேஷ் மற்றும் குமார் ஆகிய ஐந்து பேர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்