எட்டயபுரம்: எட்டையபுரம் அரசு மருத்துவமனையில் காட்டுப்பன்றி கடித்து சிகிச்சை பெற்ற நபர்களிடம் எம் எல் ஏ நேரில் நலம் விசாரித்தார்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயி முருகேசன் காட்டுப்பன்றி தாக்கி எட்டையாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்நிலையில் அவரை விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்க்கண்டேயன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் தொடர்ந்து காட்டுப்பன்றிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் அவருடன் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்