சென்னை வானகரம் வள்ளிம்மை நகர் பகுதியில் விவசாயி பழனி கீரை விவசாயம் செய்து வருகிறார், இவரது நிலத்தில் அருகே உள்ள குடியிருப்புகளுக்காக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகாலில் செல்லும் கழிவுநீர் முழுவதும் நிலத்தின் வழியே ஊடுருவி பழனியின் விவசாய நிலத்தில் தேங்கியுள்ளது. இதனால் விவசாய நிலத்தில் அரை ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த கீரைகளில் பாதியளவு கருகியுள்ளது. நிலத்தில் கலக்கும் கழிவுநீரை தடுக்க வேண்டும் என விவசாயி அரசுக்கு இன்று மதியம் கோரிக்கை விடுத்துள்ளார்,