திருப்பத்தூர்: ப.சிதம்பரம் மீண்டும் மத்திய அமைச்சராக அவரது 80-வது பிறந்த நாளில் திருப்பத்தூரில் உறுதியேற்ற காங்கிரஸ் கட்சியினர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் 80வது பிறந்தநாள் விழா காங்கிரஸ் மாளிகையில் கொண்டாடப்பட்டது. நகரத் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்த விழாவில், கேக் வெட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் நிர்வாகிகள், அவர் நீண்ட காலம் வாழவும், மீண்டும் அமைச்சராகி இந்தியாவிலும், சிவகங்கை, திருப்பத்தூர் வளர்ச்சிக்கு பாடுபடவும் பிரார்த்தித்தனர். வட்டாரத் தலைவர் பிரசாந்த், மாவட்டத் துணைத் தலைவர் கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்