அம்பத்தூர்: ஆவடி: ஆவடி திருமுல்லைவாயில் பாலாஜி நகரில் ஆயிரம் கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த ஜோசப் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
ஆவடி திருமுல்லைவாயில் பாலாஜி நகர் பகுதியில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அப்பகுதிகள் கண்காணித்த போது ஒரு வீட்டில் ஜோசப் என்பவர் பதுக்கி வைத்திருந்த சுமார் 1000 கிலோ அளவுள்ள குட்கா கூலிப் மற்றும் எம் டி எம் பாக்கு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து ஜோசப்பை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்