வேடசந்தூர்: நடுப்பட்டியில் தீபாவளியை முன்னிட்டு வட மாநில இளம் பெண்கள் நடனமாடி கொண்டாட்டம்
ஜி.நடுப்பட்டியில் நூற்பாலை விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆந்திரா, பீகார், ஒரிசா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் தங்கி இருந்து நூற்பாலையில் வேலை பார்த்து வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு அவர்களுக்கு விடுமுறை என்பதால் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்தி பாடலுக்கு ஆட்டம் ஆடி உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். விடுமுறைக்கு ஊருக்கு செல்லாவிட்டாலும் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியுடன் அனைவரும் தீபாவளியை கொண்டாடிய வீடியோ வைரல் ஆகி உள்ளது.