9வது தமிழ்நாடு பிரீமியர் லீக் TNPL 2025 பரபரப்பான இறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் நத்தம் NPR கல்லூரி மைதானத்தில் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 4வது இறுதிப் போட்டி ஆகும்.
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு இது முதல் இறுதிப் போட்டி. முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் சிறந்த பந்துவீச்சாளர்களை உள்ளடக்கிய அணி" என்று திருப்பூர் அணியை அஸ்வின் பாராட்டினார்.