எட்டயபுரம்: ஆட்டு சந்தை வளாகத்தில் எட்டப்ப மகாராஜா மீது உள்ள அவதூறை போக்க ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் ஆட்டுச் சந்தை வளாகத்தில் கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தவர் எட்டப்ப மகாராஜா என்ற வரலாற்று பிழையை எதிர்த்து மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எட்டப்ப மகாராஜா மீது சுமத்தப்பட்ட இந்த பழியை போக்க வேண்டும் எனக் கோரி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 42 வது பட்டத்து ராஜா சைத்தன்ய ராஜா பங்கேற்றார். இதில் எட்டயபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.