அரியலூர்: மாவட்ட நீதிமன்றத்தில் நாளை முதல் சமரச வாரவிழா- ஆட்சியரகம் தகவல்
சமரச வார விழா அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஏப்ரல் 08 ஆம் தேதியான நாளை முதல் 12 ஆம் தேதிவரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை, பயிற்சி பெற்ற சமரசர்கள் உதவியுடன் விரைவாக, இறுதியான, சுமூகதீர்வு காண இந்த சமரச வார விழாவை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கபட்டுள்ளது. எனவே தங்களது வழக்கை நீதிமன்ற சமரச மையத்திற்கு அனுப்பலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.