வேடசந்தூர்: கொன்னாம்பட்டியில் கோவில் கும்பாபிஷேகம் வள்ளி கும்மி நடனம்
கொன்னாம்பட்டியில் உள்ள காமுகுல ஒக்கலிகர் காப்பு பூர்வீக பசிரிவார் குல தயாதிகளின் குலதெய்வங்களான விநாயகர், பெருமாள், நாகம்மாள் ஆகிய தெய்வங்களின் கோவில்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதன் பிறகு சாமி கும்பிடும் விழா நடைபெற்றது. திங்கள் கிழமை காலை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், புண்ணியா வாசனம், வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம் உட்பட ஐந்து கால பூஜைகள் நடைபெற்று பின்னர் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்கள்கோவில் கோபுரத்தில் ஊற்றப்பட்டது.