திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவிலில் புதிய இணை ஆணையர் பொறுப்பேற்றார்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் புதிய இணை ஆணையராக மயிலாடுதுறை இந்து சமய அறநிலைத்துறை நகை சரிபார்ப்பு அலுவலர் மற்றும் துணை ஆணையராக பதவி வகித்து வந்த கா.ராமு வெள்ளிக்கிழமை முதல் பதவி உயர்வு பெற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையராக கோப்புகளில் கையொப்பமிட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.