வேளச்சேரி: சோழிங்கநல்லூர் கலைஞர் நகரில் நடுநிலைப்பள்ளியில் கழிவறை சுத்தமாக இல்லாததால் பள்ளி முதல்வரை கண்டித்த எம் எல் ஏ
சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலையில் இயங்கி வரும் சென்னை நடுநிலைப் பள்ளியில் ஒரு கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட சட்டமன்ற உறுப்பினர் எஸ் அரவிந்த் ரமேஷ் அடிக்கல் நாட்டின் கட்டுமான பணிகளை துவங்கி வைத்து பள்ளியை ஆய்வு மேற்கொண்ட போது பள்ளி மாணவ மாணவிகள் பயன்படுத்தும் கழிவறை துர்நாற்றம் வீசுவதாகவும் சுத்தம் செய்யாமல் துர்நாற்றம் வீசும் அளவிற்கு வைத்திருப்பீர்களா என பள்ளியின் தலைமை ஆசிரியரை சட்டமன்ற உறுப்பினர் கடிந்து கொண்டார்.