ஒட்டன்சத்திரம்: அம்பிளிக்கை அருகே குளத்தில் நீரில் மூழ்கி வாலிபர் பலி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த அம்பிளிக்கை அருகே குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்ற அன்பரசன் என்பவர் நீரில் மூழ்கி பலி. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் குளத்திலிருந்து அன்பரசனின் உடலை மீட்டனர். அம்பிளிக்கை போலீசார் அன்பரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.