அரியலூர்: மணக்கால் கிராமத்தில் பாஜக வேட்பாளரின் பிரச்சாரத்தில், விசிக ஒன்றிய பொருளாளர் கூச்சலிட்டதால் பரபரப்பு
மணக்கால் கிராமத்தில் இன்று கார்த்தியாயினி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, விசிக ஒன்றிய பொருளாளர் பூமிநாதன், வேட்பாளரை பார்த்து பேசாதே வாயை மூடு என்றும், வாயை மூடுமா என கூறி கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பூமிநாதனை அங்கிருந்து அப்புறபடுத்த முயற்சித்தனர். அதேசமயம் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி தனது பேச்சை நிறுத்தாமல் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.