விளாத்திகுளம்: குளத்தூர் ஸ்ரீ வெட்டூர் பெருமாள் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி உற்சவ திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ வெட்டூர் பெருமாள் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி உற்சவ திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் எம்எல்ஏ ஜிவி மார்க்கண்டேயன் கலந்து கொண்டு கொடிய அசைத்து துவக்கி வைத்தார் போட்டிகள் சின்ன மாடு பூஞ்சிட்டு என பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது போட்டிகளில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது