விருதுநகர்: பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் பழைய பேருந்து நிலையம் எதிரில் அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கினார்கள்
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் எதிரில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு வருவாய்துறை அமைச்சர் , நிதித் துறை அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் பின்னர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்கள். நகர செயலாளர் நகர் மன்ற தலைவர் மற்றும் திமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.