வேடசந்தூர் அருகே ஜி.நடுபட்டியில் கண்கவர் தேவராட்ட கும்மி நடனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு கும்மி நடனம் பயிற்சி மேற்கொண்டனர். நடுப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஊர் கவுடர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். பயிற்சியாளர் வடிவேல் பெண்களுக்கு பயிற்சி அளித்தார்.