வேடசந்தூர்: எரியோடு பாலுமஹாலில் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளரும் ஆன எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தின் மூலம் ஒவ்வொரு தொகுதியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதில் வியாழக்கிழமை மாலை வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு வருகை புரிய உள்ளார். இதனையடுத்து வேடசந்தூர் கிழக்கு ஒன்றிய அதிமுகவின் சார்பில் அவரை வரவேற்க கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எரியோடு பாலு மகாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேடசந்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனியம்மாள் சவடமுத்து தலைமை வகித்தார்.